திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயந்தி அரசு வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சித்ரா அவரிடம் சென்று பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதற்கு ஜெயந்தி தகாத வார்த்தையால் திட்டி கைகளால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சித்ரா பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியை கைது செய்தனர்.
