திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென கோவை பீளமேடு போக்குவரத்து பெண் காவலர் மீது குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது…. தான் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் லெனின் என்பவர் கேண்டீன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாகவும் லெனின் மனைவி அமிர்தவள்ளி கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக அறிமுகமானார்கள் என்றார். தொடர்ந்து சைபர் கிரைம் மூலமாக ஆன்லைன் கேண்டீம் கொண்டுவரப் போவதாகவும் அதற்கு தேவைப்படும் பணத்தை கடனாக கேட்டதாக தெரிவித்த அவர் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த ஜூலை மாதம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக அனுப்பி நிலையில் அதில் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கடந்த 18 மாதங்களாக திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரித்த போது தான் அமிர்தவள்ளி பீளமேடு காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தது தெரிய வந்ததாகவும் அப்பொழுது பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த பொழுது பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் இதனை தட்டிக் கழிக்கும் விதமாக செயல்பட்டு வந்ததாகவும் தொடர்ந்து இது சம்பந்தமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி முதல்வர் தனிப்பிரிவு உள்துறை செயலாளர் என்று பலரிடம் மனு அளித்தும் தற்பொழுது வரை அமிர்தவல்லி மீதும் அவரது கணவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் அமிர்தவள்ளி மீது 420, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும் தற்பொழுது வரை துரை ரீதியான நடவடிக்கை இல்லை என்று தெரிவித்த அவர் உடனடியாக தனது பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் அவர்கள் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.