திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது இங்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதுண்டு. இந்த நிலை நேற்று இரவு ஏலகிரி மலை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இந்த நிலையில் அவ்வழியாக பயணித்த சுற்றுலா பயணி ஒருவர் சரிந்து விழுந்த மரம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் கேசவன்,கணபதி, வைகுந்தன் வாசன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சரிந்து விழுந்து கிடந்த மரத்தை சிறிது நேரம் போராடி அப்புறப்படுத்தினர். மேலும் இரவு நேர என்பதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.