Skip to content

புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின்…

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக அரசை பொறுத்தவரை எந்த திட்டமாக சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கத்தோடு இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டமல்ல. சாதிய பாகுபாடு, குலத் தொழிலை வெளிப்படையாக ஊக்குவிக்கும் என்று விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்தோம். பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதை உறுதி செய்ய நாம் பாடுபடுகிறோம். ஆனால் அவர்களை குலத்தொழிலில் தள்ளிவிட ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது. புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.25,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில் ரூ.3.9 கோடியில் பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!