கரூர் மாவட்டம் காதப்பாறையை அடுத்த குப்புச்சி பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அருக்காணி (வயது 84). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 1 மகன், 3 மகள்கள் திருமணமாகி சென்ற நிலையில் பூர்வீக இடத்தில் வசித்து வந்துள்ளார்.
அவரது மகன் முருகையன் பூர்வீக சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட போது, மாதம் 3 ஆயிரம் ரூபாய்
வழங்குவதாக எழுதிக் கொடுத்த நிலையில் பணம் கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டி விடுவதாகவும், செத்துப் போ எனக் கூறி தாக்கியதாகவும் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். தன்னிடம் எழுதி வாங்கிய நிலத்தை மீண்டும் மகனிடமிருந்து பெற்றுத் தரக்கோரி கோரிக்கை வைத்தார். மூதாட்டி கண்ணீர் மல்க கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது