Skip to content

டான்ஸ் மாஸ்டர் சதீஷ்- கவின் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவு….

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில்கவின் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘டாடா’ , ஸ்டார், ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவர் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவை சேர்ந்த அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.