Skip to content

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சிறிது நேரத்தில் திருச்சி ஜி.கார்னர் பகுதியில் அந்த கார் தனியாக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. யார் இந்த காரை எடுத்துச் சென்றார்கள் ஏன் இங்கே விட்டு சென்றார்கள் என்பது குறித்து தடவியல் நிபுணர்களை வைத்து சோதனை சோதனை செய்தனர். பின்னர் விசாரணையில் தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர் இவர் குடும்பத்துடன் கரூர் பரமத்தி வேலூருக்கு சென்று கொண்டிருந்த பொழுது திருச்சியில் சாப்பிட்டு விட்டு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது முககவசம் அணிந்த ஒரு நபர் காரை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. காரைப்பூட்டி சாவியை இவர்கள் கையில் வைத்திருக்கும் பொழுது தெரியாத நபர் ஒருவர் எப்படி காரை எடுத்துச் செல்ல முடிந்தது என்பது காவல்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..

error: Content is protected !!