Skip to content
Home » தீபாவளி பலகாரங்கள் விலை உயர்வு… முறுக்கு, அதிரசத்திற்கு மவுசு அதிகரிப்பு…

தீபாவளி பலகாரங்கள் விலை உயர்வு… முறுக்கு, அதிரசத்திற்கு மவுசு அதிகரிப்பு…

  • by Senthil

கடந்த காலத்தை திருப்பிபார்த்தால் தீபாவளி பண்டிகை என்றால் அதிகாலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து முடித்து வீடுகளில் தயார் செய்த அதிரசம், முறுக்கு, தட்டுவகைளை வைத்து இறைவனை வணங்கி தீபாவளி பலகாரங்களை வெளுத்து வாங்குவோம். வீட்டில் தயார் செய்யப்படும் திண்பண்டங்கள் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். நவீன காலமாக தற்போது அனைத்து உணவு வகைகளும் விரைவு உணவுவாக தயார் செய்யப்படுகிறது.

குறிப்பாக தீபாவளி பலகாரங்கள் முன்வைக்கலாம், பொது மக்களை கவரும் வகையில் ரசாயன கலர் பொடிகளை கலந்து இனிப்பு வகைகளை தயார் செய்யப்படும் பலகாரங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்கும் அந்த தீபாவளி தின்பண்டங்கள் ஒரு சிலநாட்களே வீடுகளில் வைத்திருக்கமுடியும், பின்னர் அவைகள் எல்லாம் குப்பை தொட்டியில் பார்க்க முடியும் இதனால் வீண்செலவுதான் மிச்சம்.

தற்போது கரூர் மாவட்டம் கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்பெஷல் அதிரச கடை 15 வருடங்களுக்கும் மேலாக ஒரே குடும்பத்தை சார்ந்த ஜெகதீஷ்,மனைவி யமுனா மாற்று தாய் செல்வி உடன் இணைந்து பாரம்பரியமான முறையில் கைமுறுக்கு, அதிரசம் உள்ளிட்டவற்றை வருடம் தோறும் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைகாலம் நெருங்கி வரும் வேளையில் பலகாரம் தயாரிப்பு சூடு பிடித்துள்ளது அதிகம் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

பாரம்பரியமான முறையில் சுத்தமான கடலை மாவு, அரிசி, மாவு, எள், மிளகாய் தூள், உள்ளிட்ட உடலுக்கு வலுசேர்க்ககூடிய பொருட்களை கொண்டு செய்யும், கைமுறுக்குக்கு செய்து வருகின்றனர். அதிரசம் தயார் செய்வதற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக

சுத்தமான வெல்லம் மற்றும் பச்சை அரிசி, சுக்கு, ஏலக்காய், வெண்ணெய் சேர்த்து தயார் செய்வதால் வயிற்றுக்கு எந்த ஒரு கெடுதலும் வாருவதில்லை,

பெரிய பெரிய கடைகளில் கலர் பலகாரங்கள் விற்பனை செய்து வருவதால் மக்கள் அதை நாடி செல்கின்றனர்.
பாரமபரியமான முறுக்கு, அதிரசத்துக்கு முற்றிலும் மவுசு குறைந்து வந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையின் போது தயார் செய்யப்படும் இணைப்புகள் மற்றும் காரம் வகைகள் விலை அதிகரித்து வருவதால் தற்போது அனைத்து மக்களும் விலை குறைவாக கிடைக்கும் பாரம்பரியமான முறையில் தயார் செய்யப்படும் கை முறுக்கு மற்றும் அதிரசத்தை நோக்கி வருகின்றனர்.

ஒரு புறம் பொது மக்கள் தங்களுடைய உடலில் அக்கறையில்லாமல் வண்ணம் போடப்பட்ட பலகாரங்களை திண்பதால் அடிக்கடி உடல் நலபாதிப்பு ஏற்படுகிறது. சத்தாண உணவு பொருட்களை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பலகாரங்களுக்கு மவுசு குறைந்து வந்தாலும் தற்போது பாரம்பரிய பலகாரத்தை நோக்கி தற்போது வர தொடங்கியுள்ளனர்.

விற்பனை குறித்து உரிமையாளர் கூறுகையில்: 15 ஆண்டுகளாக அதிரச கடை வைத்து நடத்தி வருவதாகவும் கடந்த வருடத்தை விட தற்போது தீபாவளி வியாபாரம் சூடு பிடித்துள்ளதாகவும், வெளிமாவட்டம், கம்பெனி போன்ற பல்வேறு ஆர்டர்கள் அதிகம் வரத் தொடங்கி உள்ளது என்றால் பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் காரம் வாங்கினால் 1500 ரூபாய் செலவு ஆகிறது அதனால் மில் ,டெக்ஸ்டைல் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு தற்போது விலை குறைவாகவும் 20 அதிரசம் மற்றும் அரை கிலோ முறுக்கு 500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாலும் தரம் அதிகமாகவும் இருப்பதால் முறுக்கு மற்றும் அதிரசத்தை வாங்க தொடங்கி உள்ளதாகவும், பாரம்பரியமான முறையில் செய்வதால் அனைத்து மக்களும் ஆதரவு அளித்து வாங்கி செல்கின்றனர். கடந்த வருடத்தை காட்டிலும் தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறிப்பாக கடந்த பட்ஜெட்டில் உணவு பொருள்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி அதிகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்தாலும் தரத்தில் குறைவு இல்லாமல் விற்பனை செய்து வருவதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!