Skip to content
Home » மணல் கடத்தலை தடுத்த போலீசார் கைமுறிவு… எஸ்பி நேரில் சென்று ஆறுதல்…

மணல் கடத்தலை தடுத்த போலீசார் கைமுறிவு… எஸ்பி நேரில் சென்று ஆறுதல்…

  • by Senthil

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் வெங்கடேசன் ஆகியோரை சந்தித்து நலன் விசாரித்தார்.விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அரியலூர் மாவட்டம் தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14.09.2024 நேற்று இரவு சிவராமபுரம் வளைவில் சந்தேகத்திற்கு இடமாக மணல் ஏற்றிச் சென்ற Tata ace வாகனத்தை, இரவு ரோந்து பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் வெங்கடேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று டாட்டா ஏசி நிறுத்த முயன்ற போது TATA ACE இருசக்கர வாகனத்தின் இடது புறத்தில் இடித்ததில் காவலர் தமிழ்ச்செல்வன் வலது கையில் எலும்பு முறிவு மற்றும் இடது கை கட்டை விரல் எலும்பு

முறிவும் ஏற்பட்டது. ஊர்க்காவல் படை காவலருக்கு வலது தொடையில் காயமும் வலது கணுக்காலில் சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேற்படி காவலர்களுக்கு அங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!