கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் தளாவபாளையம் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு என்னும் மையத்திற்கு பாதுகாப்பு பணியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 காவல் துறை கண்காணிப்பாளர்கள், 22 காவல் ஆய்வாளர்கள், 97 உதவி காவல் ஆய்வாளர்கள், 373 சட்ட ஒழுங்கு காவலர்கள், 24 போக்குவரத்து காவலர்கள், 63 ஆயுதப்படை காவலர்கள், 39 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 153 ஊர்காவலர் படையினர், 24 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட மொத்தம் 804 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர கண்காணிக்குப் பிறகு அரசியல் கட்சி முகவர்களை வாக்கு என்னும் மையத்திற்கு உள்ளே அனுப்பப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சரியான முன்னேற்பாடு பணிகள் இல்லாததால் வாக்கு என்னும் மையத்தின் வெளியில் அரசியல் கட்சி முகவர்கள் குவிந்தனர். மேலும் உள்ளே அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வாக்குச்சாவடி முகவர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் போலீசாருக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் வாக்குச்சாவடி பெண் முகவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.