கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்டு இன்று காலை கோவை கண்ணாம்பாளையத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோவில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை வீட்டிற்கு காரில் செல்லாமல் மாட்டு வண்டியில் புது மனைவி தாரணியை ஏற்றி கிணத்துக்கடவு செலவம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பட்டு வேட்டி, பட்டு சேலை மற்றும் திருமண மாலையுடன் புதுமணத் தம்பதியினர் சாலையில் மாட்டு வண்டியில் வந்ததைக் கண்டு கிராமத்தில் இருந்த மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்ததோடு, மாட்டு வண்டியில் வந்த புதுமணத் ப தம்பதியினரை கிராம மக்கள் தங்களது செல்போன் மூலம் போட்டோவும் எடுத்து மகிழ்ந்தனர். சொகுசு கார்கள் இருந்தாலும் தான் ஒரு விவசாயி என்பதை உணர்த்தும் வகையில் புதுமண தம்பதியினர் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி சென்றனர்.