Skip to content
Home » பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

18 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.  பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.