Skip to content

புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

கரூரில் அண்மையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் புகார் அளித்த பெண் ஒருவரிடம் போட்டோ அனுப்பும்படி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். நிர்வாக காரணம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியனும், புகார் அளித்த பெண் ஒருவரும் வாட்ஸ்அப் மூல பேசிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகார் அளித்த பெண்ணிடம் போட்டோ அனுப்பும்படி ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் பேசும் காட்சிகள் ஆடியோ வைரலாகி வருகிறது.

இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூரில் கைது செய்யப்பட்ட 3 வடமாநில குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த 1.25 லட்சம் ரூபாயை மறைத்ததாக, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்பு பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!