சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் மார்ச் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வரும் நாட்களில் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..
- by Authour
