Skip to content

மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு மூன்று கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்க ள்  வழங்கும் விழா  தஞ்சையில் நடந்தது.  உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு திருப்புமுனையான மாநிலம் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதில் கை வைக்க முடியாது என்ற நிலை இருந்தபோது பெரியார் தலைமையில் நடைபெற்ற போராட்டம் தான் முதல் சட்ட திருத்தத்திற்கு வழி வகுத்தது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த ஒரு பிரச்சனை முன் வைத்தாலும் அதற்கான மணியோசை முதலில் கிளப்பியது தமிழகம் தான். மாநில கவர்னருக்கு சில வறைமுறை உண்டு ,சில அளவுகள் உண்டு ,சில நெறிமுறைகள் உண்டு. அதை மீறுகிற போது தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வழக்குக்கான விவரங்களை கேட்டிருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு  உச்சநீதிமன்றம் கொடுக்கின்ற நெறிமுறையோ வரன்முறையோ மற்ற மாநிலங்களுக்கும்  பொருந்தும் வகையில் உச்ச நீதிமன்றன்ற  கதவை தட்டியிருக்கிறார்  முதல்வர் முக ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!