அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மடத்து தெருவை சேர்ந்த பிரண்சிகா(14) தனது தாய் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள திம்மகுட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பிரண்சிகா ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளார். அவரால் நீந்த முடியால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்தனர். உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.