முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டது. டெல்லி நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங்குக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எடுத்துச் செல்லப்படும் வாகனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்து சென்றார்.