Skip to content

தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

தஞ்சை  மாரியம்மன்கோவில் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் லெனின் (47). கூலித் தொழிலாளி. இவர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றார்.  மாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவரது பைக்கை பின் தொடர்ந்து அவரது மகன் பிரகலாதன் (21) மற்றொரு பைக்கில் வந்து கொண்டு இருந்தார்.

மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் லெனின் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் சென்டர் மீடியனை தாண்டி லெனின் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லெனின் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். பின்னாலே வந்து கொண்டு இந்த பிரகலாதன் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.  ஆம்புலன்ஸ் மூலம் லெனின் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  அங்கு அவரை அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரகலாதன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!