கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை வாங்கி அடுக்கி வைத்துள்ளார், சருகு கட்டை இன்று வீட்டிலிருந்து பூக்கள் கட்டுவதற்காக எடுத்த பொழுது சருகு கட்டில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு திடிரென மாணிக்கத்தின் கையை கடித்தது மாணிக்கம் இரண்டு அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பை அடித்து குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பாம்புடன் சிகிச்சைக்கு வந்தார், இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் கட்டுவிரியன் பாம்பை பார்த்து பயந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து மாணிக்கம் குளித்தலை அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.