கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு அருகே உள்ள வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று நடுவழியில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை எட்டிப் பார்த்தபோது டிரைவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை செய்ததில் கோவை சுந்தராபுரம் சேர்ந்தவர் பிரபாகரன் (32), டிரைவர். இவரது வண்டியை அடையாளம் தெரியாத இருவர் வாடகைக்கு வண்டி வேண்டும் என கூறி அவரை அழைத்துச் சென்றனர். வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் செல்லும் போது இரண்டு நபர்களும் திடீரென பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.