Skip to content

அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

யானை சுட்டுக் கொல்லப்பட்டு, தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட வழக்கில் தப்பியோடிய இளைஞரா? என விசாரணை நடந்து வருகிறது. தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் என 3 பேர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்ற போது ஒருவர் தப்பி ஓடி விட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தப்பியோடியதாக கூறப்பட்ட இளைஞர் செந்திலின் உடலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!