Skip to content

மனைவியை வெட்டிக்கொன்ற கொடூர கணவன்…. ஆயுள் தண்டனை விதிப்பு..

மனைவியை பேருந்து நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2014ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞரான பிரியாவை, மதீஸ்வரன் என்பவர் திருமணம் செய்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2017ம் ஆண்டு பிரியா பிரிந்து சென்றுள்ளார்.

பின்னர், கணவருடன் இருந்த தனது மகளை தன்னிடம் ஒப்படைக்ககோரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்துசென்ற காதல் மனைவியை பஸ் ஸ்டாண்டில் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இக்கொலை செய்த அவரை போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர்  கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளி மதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையுடன் 11 ஆயிரம்அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!