Skip to content

மனைவியை கொன்று 2 நாட்கள் காரில் வைத்து சுற்றி எரித்த கொடூர கணவன்….

  • by Authour

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தென்காசி அருகே குளக்கறையில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. பெண் சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கணவனே மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் காரில் வலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவி கமலி வேறொருவருடன் பழகி வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை வந்துள்ள நிலையில், இதனால் அவரது கணவன் ஜான் கில்பர்ட் அவரை கோபத்தில் இரும்பு கம்பியால் அடித்துள்ளார்.

இதில் மனைவி கமலி உயிரிழந்த நிலையில், அவரை குளக்கரைக்கு அருகே சென்று மனைவியை எரித்துள்ளார். சிசிடிவியில் பதிவான வாகன எண்ணை வைத்து ஜான் கில்பர்ட்டை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஜான்கில்பர்டின் தம்பி தங்க திருப்பதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!