நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி சேரம்பாடி சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் புல்லட் யானை என்று அழைக்கப்படும் காட்டு யானை பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடி வந்தது பத்து நாட்களில் 40க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியும், டேன் டி தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது, இதையடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர், முதுமலையில் இருந்து சீனிவாசன் விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானை நடமாட்டத்து கண்காணித்து வந்தனர், மீண்டும் இரண்டு பேர் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது இதனால் மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், வனத்துறை தலைவர் சீனிவாச ரெட்டி தலைமையில் வனத்துறையினர் தொடர்ந்து புல்லட் யானையை அய்யன் கொல்லி பகுதியில் கண்காணித்து வந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் ஆகியோர் புல்லட் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர் பின்னர் வனத்துறை வாகனத்தில் புல்லட் யானை ஏற்றப்பட்டு பத்துக்கு மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் சூழ புல்லட் யானை பாதுகாப்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள தமிழக கேரளா வனப்பகுதி ஒட்டியுள்ள யானை குந்தி பகுதியில் விடுவதாகவும் மேலும் தொடர்ந்து யானைக்கு காலர் ஐடி பொருத்தி கண்காணிப்பதாகவும் ஆனைமலை புலிகளுக்கு கள துணை இயக்குனர் பார்கவே தேஜா தெரிவித்தார்.