சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராமு. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேவயானி(23) என்ற மகளும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். தேவயானி பி.எட் முடித்த நிலையில், வீட்டில் இருந்தபடியே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வந்தார். கண்ணன் தனது தந்தைக்கு உதவியாக கறிக்கடையை கவனித்து வந்துள்ளார்.
தேவயானியின் சடலத்தை மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கண்ணன் எதற்காக அக்காவை கழுத்தறுத்து கொன்றார் என்பது குறித்து மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மானாமதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.