அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதி செய்தார் அமித்ஷா. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். அவருடன் பாஜக
எம்.எல்.ஏ.நயினார் நகேந்திரனும் உடன் சென்றார். தமிழக அரசியல் களம் பற்றி அண்ணாமலை பாஜக தலைமையிடம் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஒரு காலத்தில் முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது திமுக ஆட்சியில் சீரழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என்றார்.