Skip to content

தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் “சுதந்திர தினவிழாவையொட்டி” நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்  கலெக்டர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் – உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட பொருட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் விவாதிக்கப்பட்டது.

மேலும், கலைஞரின் கனவு இல்லம் 2024-25, பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், ஊரக வீடுகள் பழுதுநீக்கம் திட்டம் 2024-25, பண்ணை மற்றும் பண்ணை சாரா மற்றும் சந்தைப்படுத்துதல், பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களுக்கு நிதியளித்தல், குறு தொழில்களுக்கான கடன் உத்தரவாக நிதி, தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், பொது

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இதர திட்டங்கள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உள்ளிட்டவை இந்த கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசின் அதிகாரங்களை பொதுமக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் தான் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மக்களாகிய நாம் நமது கிராமத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அரசின் திட்டங்கள், நடைமுறைகள், பயன்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 3000 சதுர அடி அளவுள்ள கட்டடங்கள் கட்டுவதற்கான அனுமதி இணையதளத்தில் உடனடியாக இலவசமாக பெற்றுக்கொள்ளும் சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி கட்டட அனுமதி சான்று பெற்றுக்கொள்ள முடியும். அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 4200 வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக பகுதிகளில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளின் பழுதுபார்க்க நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பெண்கள் மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு மகளிர் திட்டம் வாயிலாக கடனுதவிகள், சிறு, குறு தொழில்கள் மேற்கொள்வதற்கான கடனுதவிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் கிராமங்களில் அனைவரும் சுகாதாரத்தினை கடைபிடிக்கும் வகையில் கழிவறைகளை பயன்படுத்தவேண்டும் எனவும், குடிநீர் வசதி, புதிய நியாய விலைக்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினார். தொடர்ந்து, தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை போற்றி, பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கி கௌரவித்தார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.அஜித்தா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அன்பரசி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தவுத்தாய்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் அனந்தநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!