கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளான இன்று தலைவூரில் உள்ள கட்சித்
தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தமிழக முழுவதும் வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு தவெக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள தவெக மாவட்ட அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில், வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் போது, வேலு நாச்சியார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாற்றுத் திறனாளி தொண்டர் ஒருவரை கட்சி நிர்வாகிகள் நாற்காலியில் தூக்கி வந்தனர். அப்போது, வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு அவர் மனமகிழ்ச்சியுடன் மரியாதை செய்தார்.