டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கலந்துகொள்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.