பாஜகவுக்கும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் கூட்டு உள்ளது என திண்டுக்கல் லியோனி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோட் என்றால் ஆடு. இந்த ஆட்டுக்கும், அந்த ஆட்டுக்கும் கூட்டு இருக்கிறது என்பது விஜயின் கடைசி படத்திலேயே தெரிந்துவிட்டது.
பாரதிய ஜனதாவின் கைத்தடியாக இன்று திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசுவதற்காக வந்திருக்கின்ற அந்த நடிகர் தொடங்கி இருகின்ற கட்சியை தூள், தூளாக்க போகின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். விஜய் கூறுகிறார் திமுக 200 தொகுதிகளில் வெள்ளும் என இருமாப்போடு இருக்கிறதாம். அது மைனஸ் ஆகும் என்று கூறுகிறார். திமுகவை விமர்சித்த விஜயை போல பல பேர் ஒன்னுமில்லாமல் போயுள்ளனர்.