அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பாக, காய்கறிகளில் தேர்தல் விழிப்புணர்வு கோலம் மற்றும் தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு படங்களை சிற்பமாக செதுக்கி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
இதேபோன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் பாலின வாக்காளர்களுக்கு
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் வாக்களிப்பது நமது உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம் வாரீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியும் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லெட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபு நடராஜர் மணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.