Skip to content

பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

  • by Authour

திருச்சி மாவட்டம்  முசிறியை சேர்ந்தவர் எஸ். சுவாமி தாஸ். இவர் பிரபல மாலை நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர் தனது  மனைவி எஸ். பாலா என்பவர், பெயரில் முசிறி பரிசல்துறை ரோட்டில்  உள்ள  வீட்டுக்கு பட்டா கேட்டு கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி  முசிறி தாசில்தார்  பாத்திமா சகாயராஜிடம்   மனு அளித்தது குறித்தும் 6 மாத காலமாக பட்டா கிடைக்கவில்லை என்பது குறித்து இன்றைய etamilnews.com ல் “பட்டா கேட்டு 6 மாசம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை கலெக்டர் கவனிப்பாரா? “ என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி  திருச்சி மாவட்டக்கலெக்டர் பிரதீப்குமாரின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக அவர் சாமிதாஸ் தரப்பினர் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து அவை சரியானவையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக பட்டா வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு சாமிதாஸ் அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா ரெடி என்கிற தகவல் தெரிவித்துள்ளனர்.. 6 மாதகாலமாக அலைந்துக்கொண்டிருந்த நிலையில் சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்டக்கலெக்டர் பிரதீப்குமார் அவர்களுக்கு etamilnews.com குழுமம் நன்றிையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!