Skip to content

திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

திரைப்படத் தொழிலாளருக்காக மீண்டும் குடியிருப்பு நிலம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என திரைப்பட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். பின்னர் திரைப்பட சங்க சார்பில் நடிகர் நாசர் செய்தியாளர்க்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது…

சென்னையை அடுத்த பையனூரில் 100 ஏக்கர் நிலம் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் திரைப்பட தொழிலாளருக்காக சென்னையை அடுத்த பயனூரில் 100 ஏக்கர் நிலம் குடியிருப்பு கட்ட வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலம் திரைப்பட சங்கங்களின் நிர்வாக மாற்றத்தால் முறையாக மறுபதிவு செய்யாமல் அரசால் வெளியிடப்பட்ட ஆணை கலவாதியானது. குடியிருப்பு கட்ட தளர்வுக்கான ஆணை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நிலம் வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர்  உதயநிதிக்கு நன்றி என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!