ஒன்றிய அரசு வழங்கியுள்ளது போன்று 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு அலுவலர்களுக்கு 1.4.2023 முதல் தமிழக அரசும் வழங்கிஉள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இனி வருங்காலங்களில் நிலுவை இல்லாமல் உடனுக்குடன் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என தாயுள்ளத்தோடு அறிவித்த தமிழக முதல்வருக்கு ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகம் நன்றிகடன் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்