தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு 10.30 மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் மாவட்ட முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது. சில பகுதிகளில் இன்று அதிகாலையிலும் சாறல் மழை பெய்தது.
நேற்று இரவு பெய்த மழையில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 47.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தஞ்சாவூரில் 8, வல்லத்தில் 5, திருவையாறில் 7, பூதலூரில் 9.40, திருக்காட்டுப்பள்ளியில் 14.40, கல்லணையில் 10.20, ஒரத்தநாட்டில் 15, நெய்வாசல் தென்பதியில் 9.40, வெட்டிக்காட்டில் 16.40, கும்பகோணத்தில் 9.60, பாபநாசத்தில் 2, அய்யம்பேட்டையில் 6 திருவிடைமருதூரில் 16.60, கீழ் அணை கட்டில் 10.60, பட்டுக்கோட்டையில் 6.50, அதினாம்பட்டினத்தில் 6.60, ஈச்சன்விடுதியில் 10.20, மதுக்கூரில் 7.80, பேராவூரணியில் 14 என மொத்தமாக 244.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 11.64 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் வேளாண்மை குழு தகவல் தெரிவித்துள்ளது.