Skip to content

தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த போது, தாமரங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் தனியார் பேருந்தை வழிமறிந்து ஏற நிறுத்தியுள்ளார். வேகமாக வந்த தனியார் பேருந்தை ஒட்டுநர் திடீரென நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதாமல் இருக்க, இடது புறம் திருப்பியுள்ளார். இதனால் தனியார் பேருந்தில் ஏற முயன்ற பரத் என்று இளைஞர் இரண்டு பேருந்துகளுக்கு இடையே நசுங்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே திடீரென அலட்சியமாக தனியார் பேருந்தை ஒட்டுநர் நிறுத்தியதால் பின்னால் வந்த அரசு பேருந்து தனியார் பேருந்து மோதாமல் இருக்க இடதுபுறம் திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!