தஞ்சாவூர் கீழவாசல் எஸ் என் எம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா வயது 43. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து அருணா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது தஞ்சை பள்ளி அக்ரஹாரம் புறவழிச்சாலை அருகே சென்ற போது பின் தொடர்ந்து வேகமாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அருணாவின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அருணா இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டி சென்றார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து அவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு
- by Authour
