தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் மேலாளராக தஞ்சாவூர் கணபதி நகர் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகள் வித்யா மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை கடை பணத்திலிருந்து வித்யா ரூ.81,640 ஐ சிறிது சிறிதாக மோசடி செய்து வந்துள்ளார். அதை கணக்கு களை உரிமையாளர் சுரேஷ் பாண்டியன் சரிபார்த்தபோது இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ் பாண்டியன் தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..
- by Authour
