டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் வந்தடைந்தது.
கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் பாலத்தில் உள்ள மன்னன் கரிகாலன், ராஜராஜசோழன் மற்றும் அகத்தியர், கல்லணையை கட்டிய பொறியாளர் ஆர்தர் காட்டன், விவசாயி, மீன்பிடிக்கும் பெண், காவிரி அம்மன் ஆகிய சிலைகளுக்கும் புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலையில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.
அமைச்சர்கள் கே. என். நேரு, , மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் (தஞ்சாவூர்), பிரதீப்குமார் (திருச்சி) மகாபாதி(மயிலாடுதுறை, யானிடாம் வர்க்கிஸ் (நாகை)ஆகியோர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ் .எஸ். பழநிமாணிக்கம், கல்யானசுந்தரம், செ.ராமலிங்கம், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மேயர் சண். இராமநாதன், மற்றும் பொதுப்பணித்துற அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் , புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சம்பா, தாளடியை சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கல்லணையில் உள்ள முன்னதாக கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் மற்றும் கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோவிகளில் டெல்டா மாவட்டங்களில் விவசயம் செழிக்க சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது