Skip to content
Home » தஞ்சை அருகே இளம்பெண்ணிடம் நூதன பண மோசடி… சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு..

தஞ்சை அருகே இளம்பெண்ணிடம் நூதன பண மோசடி… சைபர் க்ரைம் போலீஸ் வலைவீச்சு..

  • by Senthil

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார். தொடர்ந்து அந்த மர்ம நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம். அதனை சரியாக செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் நாங்கள் இரண்டு மடங்காக பணம் செலுத்திக் கொண்டே இருப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அந்த இளம் பெண் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி ஒரு வங்கி கணக்கையும் கொடுத்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் கடந்த 26.7.23 முதல் பல தவணைகளாக அந்த மர்ம நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 74 ஐ செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி வங்கி கணக்கில் பணம் வந்து சேரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் டெலிகிராம் ஆன்லைன் செயலியில் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

அப்போது தான் அந்த மரபு நம்பர் தன்னை ஏமாற்றியதை அந்த பெண் உணர்ந்தார். இது குறித்து அப்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் மாவட்ட எஸ் பி ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில், ஏ.டி.எஸ்.பி.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைன் செயலியில் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் மேலும் whatsapp facebook ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு எண் ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அது குறித்து தெரிவிக்க கூடாது இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும் எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!