தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 29 வயது இளைஞருக்கு இணையவழியில் மேட்ரிமோனி செயலி வழியாக சில பெண்களின் புகைப்படங்கள் ஜூலை மாதம் வந்தது. இதில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சில டாஸ்குகளை நிறைவேற்றினால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் கூறினார். இதை நம்பிய இளைஞர் பல்வேறு தவணைகளில் அப்பெண்ணுக்கு இணையவழியில் ரூ. 14.76 லட்சத்தை அனுப்பினார். ஆனால், அப்பெண் எந்தவித லாபமும் கொடுக்காததுடன், இளைஞரின் அழைப்புகளையும் எடுக்காமல் மறுத்துவிட்டார்.
இதனால், ஏமாற்றமடைந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.