தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவரிடம் குறைந்த கட்டணத்தில் விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 15.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் பகுதி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவரது செல்ோன் எண்ணுக்கு கடந்த அக்டோபர் 7ம் தேதி ஒரு மர்ம நபர் அழைத்துள்ளார். விமானப் பயணச்சீட்டும், வெளிநாட்டு விசா இரண்டையும் குறைந்த கட்டணத்தில் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் கூறும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பினால் பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய வெளிநாட்டுக்கு முயற்சி செய்தவர் ரூ. 15 லட்சத்து 15 ஆயிரத்து 385 ஐ மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் செல்போனை எடுக்கவே இல்லை. பலமுறை முயற்சி செய்தும் செல்போனை சுவிட்ஸ் ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மர்மநபர் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தார்.
இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.