கத்தாரில் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி அக்.10 முதல் 20 வரை நடக்கிறது. இதில் உலகின் சிறந்த முன்னணி செஸ் வீரர்கள் 160 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 9 சுற்றுக்களாக நடக்கிறது. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
7வது சுற்று போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி எதிர் கொண்டார். இதில் அவர் கருப்பு காய்களுடன் ஆடினார். மிகவும் அற்புதமாக ஆடிய கார்த்திகேயன் கார்ல்சனின் சிறிய தவறை கச்சிதமாக பிடித்துக் கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கார்த்திகேயன் முரளி அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதம் உள்ளன.
இந்த போட்டியில் தற்போது தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் 5.5 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இதன் மூலம் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 3 வது இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றார்.