தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் 145 வது பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளிச்செயலர் தனசேகரன் வாண்டையார் தலைமை வகித்தார். போட்டிகளை அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், பிரபாகர், பூண்டி இளவல் சூர்யபிரகாஷ் வாண்டையார் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பிரபு பாண்டியன் மற்றும் சுந்தர் பிரகாஷ் வாண்டையார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு சுழற்கோப்பையை அதிக போட்டிகளில் வென்ற நீல நிற அணி மாணவர்கள் தட்டிச் சென்றனர்.