தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் செப்டம்பர் 11 ஆம் தேதி பணி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கினார். அப்போது, தன்னை ஏதோ கடித்ததாக தனது கணவரிடம் ரம்யா கூறினார். அங்கு பார்த்தபோது கட்டு விரியன் பாம்பு ஓடியது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்