Skip to content

தஞ்சையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழக கரிகால சோழ கலையரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள 1253 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 18086 உறுப்பினர்களுக்கு ரூ.108.49 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் த் தலைமையில் நடைபெற்றது. இதை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய இரண்டு திட்டங்களை தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் 15176 மகளிர் சுய உதவிக் குழுக்களும், நகர் பகுதியில் 3570 மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஆக கூடுதல் 18746 மகளிர் சுய உதவிக்களில் 216651 சுய உதவி குழு உறுப்பினர்கள் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2022-2023ம் ஆண்டு ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக 16406 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1050.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் 17407 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1216.35 கோடியும், சுழல் நிதியாக 94 சுய உதவிக்குழுக்ளுக்கு 14.10 லட்சமும், சமுதாய முதலீட்டு நிதியாக 279 சுய உதவிக்குழுக்ளுக்கு 418.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டு ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் 26100 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.1481.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் தற்போது வரை 19320 சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ 1279.79 கோடி இலக்கீடு அடைய பெற்றுள்ளது.

இதை நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் வழியாக தொடக்கி வைத்தார். இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வங்கி நேரடி கடனாக 1233 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12851 உறுப்பினர்களுக்கு ரூ.76.34 கோடியும், 49 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ.28.37 கோடி மதிப்பிலான வங்கி பெருங்கடனும், 168 சுய உதவிக்குழுக்ளுக்கு 2.52 கோடி மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதியும். 147 தொழில் செய்யும் தனிநபர்களுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான ஓரிட சேவை மைய நிதியும்,  87 தொழில் செய்யும் தனிநபர்களுக்கு ரூ.44  லட்சம் மதிப்பிலான வட்டார சேவை மைய நிதியும் ஒரு மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு ரூ.9.36 லட்சம் என மொத்தம் 1253 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 18086 உறுப்பினர்களுக்கு ரூ.108.49 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம் அண்ணாதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் கீதா மாநகராட்சி மேயப் சன் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *