தஞ்சை அடுத்த அன்னப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜய்(25). இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(25) மற்றும் மணியரசன்(24) ஆகியாருடன் தஞ்சையில் இருந்து இருசக்கர வாகனத்தில் அன்னப்பன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். கூடலூர் அருகே புதிதாக அமைக்கப்படும் புறவழிச்சாலையில் சென்றபோது, அஜய், இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜய், சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மணியரசன், பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தாலுகா காவல் நிலைய போலீசார், பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்து வருகின்றனர்.