தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி மைதிலியை அழைத்து வருவதற்காக பைக்கில் புறப்பட்டார். விக்கிரவாண்டி -தஞ்சாவூர் புறவழிச்சாலை கடகடப்பை ஊராட்சி பிரிவு சாலைக்கு அருகே சாலையை கடக்க சுதாகர் பைக்கை திருப்பி உள்ளார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சுதாகரின் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.