தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி அன்று ஊருக்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்த சிவஞானம் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1690 கிராம் வெள்ளிப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் மற்றும் பைக் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சிவஞானம் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.21 ஆயிரம் என்று கூறப்படுகிறது.