தஞ்சாவூர் அருகே வல்லத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க திண்ணை பிரச்சாரம் நடந்தது. வல்லம் பேரூராட்சி சார்பில் அய்யனார் நகர் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு
தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி முன்னிலை வகித்தார். வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம், தஞ்சை மத்திய மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, தஞ்சை மத்திய மாவட்ட மகளீர் தொண்டர் அணி அமைப்பாளர் கமலா ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வல்லம் பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள், அனைத்து வார்டு கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.